நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் கமிட்டி பரிந்துரைத்த 71 பெயர்கள் கொண்ட பட்டியலில் பாதிக்கும் மேற்பட்ட பட்டியலை மத்திய அரசு நிராகரித்துள்ளது.மத்திய மோடி அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், நீதிபதிகளை நியமிக்க அமைக்கப்பட்ட கொலீஜியம் கமிட்டிக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடும் மோதல்போக்கும்
உருவானது. இது உச்சநீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்குமிடையிலான, வெளிப்படையான மோதலாக உருவான நிலையில், இதுதொடர்பாக பதிவுகளை நாம் வெளியிட்டிருந்தோம் (https://minnambalam.com/k/1471564815) இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க 77 நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்து அதற்கான பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்கக அனுப்பியது.
ஆனால் இந்தப் பட்டியலை பரிசீலித்த மத்திய அரசு, 77 பேரில் 35 நீதிபதிகளின் நியமனத்துக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் மீதமிருக்கும் 42 நீதிபதிகளின் நியமனப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியம் குழுவுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. கொலிஜீயம் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் நிலவிவந்த மோதல் சற்றே ஓய்ந்திருந்தநிலையில் இப்போது இந்த விவகாரம் வெடித்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பொதுநல வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை நிராகரித்ததை குறிப்பிட்டார். இந்த வழக்கு, நவம்பர் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும்நிலையில், நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் குழு வருகிற 15ஆம் தேதி கூடவிருக்கிறது. அப்போது, மத்திய அரசின் இந்த அணுகுமுறைபற்றி குழு கூடி விவாதித்து சில முடிவுகளை எடுக்க உள்ளது.