மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து, சென்னையில், எட்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மத்திய அரசு, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு பதில், புதிதாக, 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையில், ‛ஹவாலா' பரிமாற்ற பேர்வழிகள், பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுத்து வருவதாக தகவல் வெளியானது. இத்துடன் பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு தங்கத்தை வாங்கி குவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை, பாரிமுனையில் உள்ள தங்க நகை கடைகள், ஹாவாலா பரிமாற்ற பேர்வழிகளின் வீடுகள் என, எட்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஐதராபத்திலும் இது போன்று பல இடங்களில் சோதனை நடந்தது. பாகுபலி படத் தயாரிப்பாளர் மற்றும் நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடந்தது.