அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க வட்டியில்லா முன்பணம் ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்.
ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், "ஏழாவது மத்திய ஊதியக் குழு அமலாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநிலங்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:
ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கப்படும் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வப்போது வாகனங்கள் வாங்குவதற்கான சில திட்டங்கள் சந்தையில் நடைமுறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு வாகன முன்பணம் வழங்குவதை ரத்து செய்யுமாறு ஊதியக் குழு பரிந்துரை செய்திருந்தது. இப்பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று அமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ்: மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா, "தமிழகத்தில் எய்ம்ஸ் போன்ற புதிய மருத்துவமனைகள் அமைக்கும் புதிய முன்மொழிவு ஏதும் அரசின் வசம் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநிலங்களவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு: பிரதமர் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (பிஎம்எஸ்எஸ்ஒய்) முதல் கட்டமாக போபால், புவனேசுவரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆறு இடங்களில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி, பெருந்துறை, மதுரை தோப்பூர் உள்ளிட்ட ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்த இடங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைஅரசின் பரிசீலனையில் உள்ளது என்று அர்ஜுன் ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்