அமெரிக்க பல்கலைக் கழகங்கள் – இந்திய மாணவர்களுக்கு அழைப்பு!!

2015-2016 கல்வி ஆண்டில், சுமார் 1,65,918 மாணவர்கள் படிப்பதற்காக அமெரிக்காவில் சேர்ந்துள்ளனர். இது, 2014-2016 கல்வி ஆண்டை விட 25% அதிகம்.

’ஓபன் டோர்ஸ் 2016’ அறிக்கையின்படி, சர்வதேச கல்வி பரிமாற்றத்தில் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் இந்தியா
இரண்டாவது முன்னணி நாடாக உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிக்கவும், கல்வி தொடர்பாக கேட்டறியவும் சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, மும்பை, அகமதாபாத் ஆகிய தூதரகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிப்பவர்களில் 36% பேர் பொறியியல் மற்றும் கணிதம் படிக்கிறார்கள். மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை 35 % பேர் படிக்கிறார்கள்.

20 அமெரிக்க கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள் நவம்பர் 14ஆம் முதல் 19 ஆம் தேதி வரை கொல்கத்தவிற்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க வர்த்தக சேவை மற்றும் பிரின்ஸ்டன் இஎல்எஸ் மொழி சேவை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த மாணவர்கள் கண்காட்சியில், அமெரிக்க தூதரக தலைவர் கிரேக் ஹால் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இந்தியா, ஜனநாயகம், சகிப்புத்தன்மை மற்றும் பல்கலாச்சாரத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளது. எனவே,அதே மதிப்பும் நம்பிக்கையும் அமெரிக்காவில் உள்ளதால் இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் எளிதாக ஒன்றிணைய முடியும் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் கல்வி கற்பதன் சிறப்பு என்னவென்றால், அங்கு இரண்டு 2 பட்ட படிப்புகளை ஓரே நேரத்தில் படிக்கலாம். ஒருவர் பி.எஸ்சி. வேதியியல் படிப்பையும், ஆங்கில படிப்பையும் ஒரேநேரத்தில் படிக்கலாம். மேலும், பட்டப்படிப்பு படிக்கும் போதே அந்த மாணவர்கள் ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் படிப்பு தொடங்குகிறது. படிப்பில் சேர்வதற்கு 18 மாதங்களுக்கு முன்பே, மாணவர்கள் தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் பல தேர்வுகளை அவர்களால் எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...