கல்வித்துறை இணையதளம் முடங்கியுள்ள பரிதாபம்!!!

மாவட்ட கல்வித்துறைக்கான இணையதள பணிகள் முடங்கியுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட கல்வித்துறைக்கென, www.ceotiqouppuqo.in என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என, கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
இதில், மாவட்ட பள்ளி கல்வித்துறையின் வரலாறு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விவரம், போன், படங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, தாலுகா, வட்டார அளவில் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து, தகவல்கள் சேகரிக்கும் பணி, சுறுசுறுப்பாக துவங்கியது; ஆனால், சில மாதங்களை கடந்ததும், எல்லாம் நின்று போனது; மாவட்ட கல்வித்துறைக்கான இணையதளம் அமைக்கும் பணிகள், பெயரளவுக்கு கூட முழுமையடைய வில்லை.தஞ்சாவூர் மாவட்ட கல்வித்துறைக்கென, இணையதளம் உள்ளது.

அதில் பள்ளிகள் விவரங்கள், மாவட்ட அளவில் நடத்தப்படும் தேர்வுகள், போட்டோ கேலரி, அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் அறிவிப்புகள், புதிய திட்டம், ஆர்.எம்.எஸ்.ஏ., - எஸ்.எஸ்.ஏ., பணிகள் போன்ற தகவல்கள், உடனுக்குடன் "அப்டேப்&' செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள், தங்களுக்கென இணையதளங்கள் வைத்து, விவரங்களை வெளியிட்டு, பெற்றோரை கவர்ந்து வரும் நிலையில், மாவட்ட கல்வித்துறைக்கான இணையதளம் அமைக்கும் பணி முடங்கியிருப்பது, கல்வி ஆர்வலர்கள் இடையே, கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிப்போடு நின்று போயுள்ள, மாவட்ட கல்வித்துறை இணையதளத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே,எதிர்பார்ப்பே ஆகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...