பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!

டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தியே வாங்க உள்ளனர்பணமில்லா கோவா :



கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட உள்ளது. மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.




மொபைலில் வியாபாரம் :


ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும். சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.




மக்களிடம் விழிப்புணர்வு :


பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்

இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.




பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :


இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு. இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின் கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால், அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை பயன்படுத்தி செய்யலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...