இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்து உள்ளது.குறிப்பாக மார்பக புற்று நோயால் பெண்கள் அதிக அளவில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டு
இருக்கிறது.2012–ம் ஆண்டில் 39 ஆயிரத்து 234 பேரும், 2013–ம் ஆண்டில் 40 ஆயிரத்து 509 பேரும் 2014–ம் ஆண்டு 41 ஆயிரத்து 851 பேரும் மார்பக புற்றுநோயால் இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.2015–ம் ஆண்டில் 62 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் புற்று நோய் தொடர்பாக உயிரிழந்த மொத்த பெண்களில் 24 சதவீதம் பேர் ஆவர்.அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 2020–க்குள் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்து இருக்கிறது.