சென்னை மயிலாப்பூரில் சாலையோரங்களில் உணவு பொருட்களை சமைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளை அகற்றுவதற்கு கூட்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மயிலாப்பூர் மற்றும் லஸ் சர்ச் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர். இப்படி சாலையோரங்களில் வைத்து சமைப்பதால் உணவு சுகாதாரமற்றதாக மாறுகிறது. இதனால், அந்தக் கடைகளில் சாப்பிடும் பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், நடைபாதை வியாபாரிகளையும் முழுமையாக அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்தது. அப்போது மாநகராட்சி 9ஆவது மண்டல உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைதான். அதேநேரம், அப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 3, 22, மற்றும் அக்டோபர் 13, 31 ஆகிய தேதிகளில் நான்கு முறை திடீர் சோதனை நடத்தி ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கை எடுக்கப்பட்டும் அவர்கள், திரும்பவும் அதே இடத்தில் கடை போடுகின்றனர். அதனால், நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த மாநகராட்சியில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 154 நடை பாதை ஆக்கிரமிப்பு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, மாற்று இடம் ஒதுக்குவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் மாற்று இடங்களுக்கு செல்ல மறுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, ‘இது போன்ற வழக்குகள் வரும்போது, கூடவே பிரச்னையும் வருகிறது. நடைபாதை, சாலையோர வியாபாரிகளுக்கு ஒருமுறை மாற்று இடம் ஒதுக்கப்பட்டால், மறுபடியும் பழைய இடத்தில் வியாபாரம் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. சாலையோரங்களில் உணவு விற்பனை செய்யலாம். ஆனால், அங்கேயே உணவு சமைக்க அனுமதிக்கக் கூடாது. வியாபாரிகள், உணவுபண்டங்களை தயாரிப்பதற்கு தனிப்பட்ட முறையில் உரிமத்தையும், அனுமதியையும் பெற வேண்டும். சாலையோர வியாபாரிகளை அகற்றுவதற்கு ஒருமுறை சோதனையும், நடவடிக்கை எடுத்தால் போதாது. தொடர் சோதனையும், அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையும்தான் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடியும். அதனால், மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையரும், 9ஆவது மண்டல மாநகராட்சி உதவி ஆணையரும் தொடர்ந்து அப்பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.