ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு என்பது உகந்தது அல்ல. மதம் சார்ந்தது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்புடையது அல்ல. தமிழக அரசே ஜல்லிக்கட்டு ஒரு நிகழ்வு எனக்குறிப்பிட்டுள்ளது என்றனர். தொடர்ந்து விசாரணை நடந்தது.
தள்ளுபடி:
விசாரணைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் சீராய்வு மனு ஏற்க கூடிய வகையில் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கூடியது அல்ல. ஜல்லிக்கட்டை அனுமதிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறினர்.