அனைத்து சேமிப்பு கணக்குதாரர்களுக்கும் கட்டணம் இன்றி ஏ.டி.எம். அட்டை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!!

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் ஏ.டி.எம். அட்டைகள் அல்லது ஏ.டி.எம். உடன் இணைந்த டெபிட் அட்டைகள் வழங்குமாறு பாரத ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.


இது தொடர்பான சுற்றறிக்கை, வங்கிகளுக்கு 2012-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்துக்கொள்ளாதபோது, வாடிக்கையாளர்களுக்கு அபராத கட்டணம் வசூலிக்கவும் 2015-ம் ஆண்டு வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...