மத்திய அரசு மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு கொண்டுவரவுள்ள எக்சிட் தேர்வுக்கு எதிராக மருத்துவ சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது.
மத்திய அரசு இளநிலை, முதுநிலை போன்ற மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு தேசிய உரிமத்தேர்வு என்ற எக்சிட் தேர்வை கொண்டுவர
திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது: “இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தான் மருத்துவ மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். மேலும் பயிற்சி மருத்துவத்தை முடித்த பின்புதான் மருத்துவர்களாக தகுதி பெறுகின்றனர். எனவே மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு நடத்தவுள்ள எக்சிட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். அதுபோல் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு வழங்கிட வலியுறுத்தியும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் அனைத்துக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதை உத்தரவாதப்படுத்திட வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் வரும் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தப்படும்” என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.