இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கவுன்சில் கெடு.!!!


இன்ஜி., கல்லுாரிகள் பேராசிரியர்கள் விபர பட்டியலை, வரும், 20ம் தேதிக்குள் திருத்தம் செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., 'கெடு' விதித்துள்ளது.


இன்ஜி., கல்லுாரிகளில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில், மாணவர், ஆசிரியர் விகிதத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும் நெட் தேர்வு முடித்தவர்களையே, பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், பல கல்லுாரிகளில் வெறும், பி.இ., - பி.டெக்., முடித்தவர் கள், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து, அனைத்து கல்லுாரிகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா என ஆய்வு செய்ய, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்கள் எண்ணிக்கை, நிரந்தர பேராசிரியர்கள் எண்ணிக்கை, நுாலக, ஆய்வக வசதி உள்ளிட்ட விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்துள்ளன. அவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் எனில், நவ.2க்குள் செய்து கொள்ளலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...