இணையதள பயன்பாடு : மகாராஷ்டிரா 'டாப்!!!

நாட்டில் இணையதள சேவையை அதிகம் பயன்படுத்துவோர் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இமாச்சல பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.


அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை இந்தியாவில் 342.65 மில்லியன் பேர் இணையதள சேவையை பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் மகாராஷ்டிராவில் நாட்டிலேயே அதிகபட்சமாக 29.47 மில்லியன் பேர் இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து இணையதள சேவையை அதிகம் பயன்படுத்துவோர் வசிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் - 28.01 மில்லியன், ஆந்திரா - 24.87 மில்லியன், கர்நாடகா - 22.63 மில்லியன் ஆகும். மிக குறைந்தபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 3.02 மில்லியன் பேர் இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள்.



நாடு முழுவதிலும் உள்ள 342 மில்லியன் இணையதளம் பயன்படுத்துவோரில் 67 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நகர்புறங்களில் வசிப்பவர்கள். கிராமப்புற இணையதள சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 111.94 மில்லியனாக உயர்ந்துள்ளது. நகர்புறங்களில் இணையதள சேவையை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் தமிழகம் (21.16 மில்லியன்) முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் உ.பி.,யின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் 11.21 மில்லியன் பேர் இணையதளம் பயன்படுத்துபவர்கள் என தெரியவந்தது. டில்லியில் 20.59 மில்லியன் பேரும், மும்பையில் 15.65 மில்லியன் பேரும், கோல்கட்டா 9.26 மில்லியன் பேரும் இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் பாரத்நெட் திட்டத்தின் மூலம் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...