இத்தாலியின் அண்டிரா நகரில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்ட உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியச் சிறுமி தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
5 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆட்டங்களில் தஜாமுல் இஸ்லாம் (8) வெற்றிபெற்றுள்ளார் என அவரது பயிற்சியாளர் ஃபாசில் அலி தெரிவித்துள்ளார். உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பை பெறுவதற்கு
தஜாமுல் இஸ்லாம் அமெரிக்க கிக் பாக்ஸரை வீழ்த்தியுள்ளார். காஷ்மீரில் இருந்து வெற்றிபெற்றுள்ள முதல்வீரரும் இவர்தான்.
90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 2ஆம் வகுப்பு படிக்கும் தஜாமுல் கலந்துகொண்டார். 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் என, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் மாநில விளையாட்டு கவுன்சில் செயலாளருமான வாஹீத் பர்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, டெல்லியில் சப்-ஜூனியர் பிரிவில் தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் கலந்துகொண்ட தஜாமுல் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்னர்தான் அவருக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.
பண்டிபோரா மாவட்டத்தில் டர்க்போரா கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் தஜாமுல் இஸ்லாம். ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்மி குட்வில் பள்ளியில் பயின்று வருகிறார். இஸ்லாமின் தம்பி மற்றும் 2 தங்கைகளும் கிக் பாக்ஸிங் பயின்று வருகின்றனர். தஜாமுல் இஸ்லாமின் திறமையை மதிக்கும்விதமாக மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தர், இது பெருமையான தருணம் என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.