அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க ஊதிய குழு

அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க ஊதிய குழு மேல்-சபையில், முதல்-மந்திரி சித்தராமையா தகவல்!!!


பெங்களூரு,

கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க ஊதிய குழு அமைக்கப்படும் என்று மேல்-சபையில் சித்தராமையா தெரிவித்தார்.ஊதிய குழு


கர்நாடக மேல்-சபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியதும் கேள்வி நேர நிகழ்வுகள் தொடங்கின. உடனே பா.ஜனதா உறுப்பினர்கள் ராமச்சந்திரகவுடா, அருண் சகாப்புர், கணேஷ் கார்னிக் ஆகியோர், அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் எப்போது மாற்றி அமைக்கப்படும் என்று கேள்வி கேட்டனர். அதற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்து கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கர்நாடக அரசு ஊழியர்கள் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக ஊதிய குழு அடுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். அரசு ஊழியர்களின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்கிறோம். இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. எங்கள் அரசு வாக்குறுதிப்படி செயல்படும் அரசு.அநீதி ஏற்படாமல் பார்த்து...

ஊதிய குழு அமைக்கும்போது, மத்திய அரசு ஊழியர்கள்-மாநில அரசு ஊழியர்கள் இடையேயான சம்பள வேறுபாடுகள், பல்வேறு படிகள் குறித்து ஆய்வு செய்து சரிசெய்யும்படி உத்தரவிடப்படும். வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். நமது ஊழியர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும்.

1966-ம் ஆண்டு முதல் இதுவரை 5 ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் இடையே சம்பளம் விகிதத்தில் அதிகளவில் வித்தியாசம் உள்ளது. மத்திய அரசின் ஊதிய விகிதங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு ஊதிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வழங்கிய பரிந்துரையை ஏற்று கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது.சம்பளமாக ரூ.25 ஆயிரம் கோடி

நமது மாநிலத்தில் மொத்தம் 7 லட்சத்து 79 ஆயிரம் அரசு பணி இடங்கள் உள்ளன. இதில் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் தற்போது பணியாற்றி வருகிறார்கள். 2 லட்சத்து 69 ஆயிரம் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ.12 ஆயிரம் கோடி ஓய்வூதியம் வழங்குகிறோம். ஆகமொத்தம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ஆண்டுக்கு ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

மாநில அரசு கடந்த முறை ரூ.1.63 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் ரூ.25 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. மொத்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு 25 சதவீதம் ஒதுக்க வேண்டியுள்ளது. அரசு துறைகளில் உள்ள காலி இடங்கள் படிப்படியாக முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு போலீஸ், கல்வி, பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ராஜ் உள்பட பல்வேறு துறைகளில் காலி இடங்களை நிரப்பியுள்ளோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...