தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக, புதிய திறன் மையம் கோவையில் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொலைத்தொடர்புத் துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து மேற்கொண்டன.
இதன்மூலம், தொலைத்தொடர்புத்துறை அகண்ட அலைவரிசை (பிராண்ட் பேண்ட்) தொழில்நுட்பம், ஆப்டிக்கல் பைபர் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு முறைகள், வலைத்தொடர்பு மேலாண்மை, வாடிக்கையாளர் செயல்திறன் மேம்பாடு, பழுதுநீக்கல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.
தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) கோச்சர் பேசியதாவது:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க சிறப்பான பயிற்சியை இந்த மையம் அளிக்கும். மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு திறனை அளிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்.
அடுத்த, 5 ஆண்டுகளில், 8.67 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சியை கொண்டு செல்ல ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையை கையாள உள்ளோம், நவீன காலத்திற்கேற்ப தரமான முறையில் பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கல்லுாரி முதல்வர் ருத்ரமூர்த்தி கூறுகையில், ”அடுத்து 10 ஆண்டுகளில், 80 லட்சம் திறன்மிக்க பணியாளர்களுக்கு, தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு நிச்சயம். இம்மையத்தில் பயிற்சி பெறுவோர், தனக்கு வழங்கப்படும் சான்றிதழ் மூலம், எளிதாக வேலைவாய்ப்பினை பெறலாம்,” என்றார்.