கார், வீடு, விவசாய மற்றும் சில கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த 60 நாள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை செலுத்த வேண்டிய கடன் தவணை தொகைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.1 கோடி மற்றும் அதற்கு குறைவாக கடன்
வாங்கியவர்களுக்கு தான் இந்த சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.அதிக பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அதனால் ஏற்பட்ட பணிகள் காரணமாக வழக்கமான வங்கி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் செலுத்தப்படும் செக் மாற்றிக்கொடுப்பது தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கியிலிருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் தான் பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்கள் தவணை தொகையை திருப்பி செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அவர்களுக்கு கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.