ஆவடி அருகில் பள்ளிக் கட்டடம் ஆடுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆவடி, காமராஜர் நகரிலுள்ள தனியார் பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. காலை 11 மணியளவில் பள்ளியின் 2-ஆவது மாடியிலுள்ள 5-ஆம் வகுப்பு
மாணவர்கள் பள்ளி கட்டடம் ஆடுவதாகக் கூறி வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இதைப் பார்த்த, மற்ற மாணவர்களும் பள்ளியை விட்டு வெளியில் வந்தனர். இந்தத் தகவல் காட்டு தீ போல் பரவி, சுற்று வட்டார மக்களும், மாணவர்களின் பெற்றோரும் பள்ளியின் முன் கூடினர்.
பள்ளி நிர்வாகம், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து எடுத்துக் கூறியும் பெற்றோர் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு பள்ளி நிர்வாகத்தினர் கட்டடத்தை சுற்றிக் காண்பித்தனர். இருப்பினும் பெற்றோரில் ஒரு பகுதியினர், கட்டடத்தின் உறுதித்தன்மையை நிருபிக்கும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறினர். இதையடுத்து, பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளிப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்தனர்.