இலவச செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி:முன்பதிவு செய்ய நாளை கடைசி நாள் !!

சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) வழங்கவுள்ள இலவச செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய நவம்பர் 3 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிப்போ பொதுமேலாளர் கே.பழனிவேல்முருகன் வெளியிட்ட செய்தி: சிப்போ மற்றும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
தொழில் அபிவிருத்தி கழகம் இணைந்து 6 வார கால இலவச செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சியை அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியலில் பட்டம் பெற்ற ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
இதில் தொழில் வாய்ப்புகள், வங்கி கடன் உதவி, மானிய உதவிகள், ஏற்றுமதிஇறக்குமதி தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படும். நவம்பர் 4 ஆம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 3 ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் பதிவு செய்யும் 25 நபர்கள் மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஆர்வமுள்ளவர்கள், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் 52, டிபி சாலை, மஹபூப்பாளையம், மதுரை-16 என்ற முகவரியிலும், 0452-2602339, 2603085, mdusippo@gm​ail.com​ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...