நீதிபதி காலியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?

நாடு முழுவதிலும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 43% நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சகம் புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது.
நீதிபதிகளை நியமிப்பது குறித்த விவகாரத்தில் வகுக்கப்படவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும்
இடையே குழப்பம் நிலவிவருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 24 உயர்நீதிமன்றங்களில், 1079 நீதிபதி பணியிடங்களில் 464 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில், அதிகபட்சமாக ஆந்திரா உயர்நீதிமன்றங்களில் அதிகமாக நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் 83 நீதிபதி பணியிடங்களும், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றங்களில் 39 நீதிபதி பணியிடங்களும், கர்நாடகாவில் 36 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி காலியிடங்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக்கிடங்கும் நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியா முழுவதும் 2.18 கோடி வழக்குகள் தீர்வு காணாமல் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது. தமிழகத்தில் 1.37 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியா முழுவதும் இந்த ஒரு வருடத்தில் மட்டும் அதாவது, கடந்த ஏப்ரல் 30 முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...