வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது !!

சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:



சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...