இந்திய மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் நவீன மருந்துகளை (அலோபதி) மக்களுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கபம், பித்தம், வாதம் ஆகிய மூன்று வகையில் நோய்களை பிரித்து அதற்கேற்ற மூலிகைகளை கொடுத்து சரிப்படுத்துவதே சித்த மருத்துவத்தின் சிறப்பாகும்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய முறை சிகிச்சை அளிக்கும் இந்திய மருத்துவர்கள் நவீன மருந்துகளை பரிந்துரைப்பதாக புகார் எழுந்தது. எனவே, இந்திய மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு தடை விதிக்க கோரி தனியார் மருத்துவச் சங்கத்தினர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீண்டகாலமாக இருக்கும் இந்த வழக்குகளுக்குத் தீர்வு காணும் வகையில் இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதோடு, ‘எந்த மருத்துவ சிகிச்சைக்கு தகுதி பெற்றிருக்கிறார்களோ அந்த முறையில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் யுனானி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளை முடித்தவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை மாநில அரசு பராமரிக்கும் பதிவில் பதிவு செய்த பின்னரே தங்களது மருத்துவப் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...