அவைகுறிப்பை இணையதளத்தில் ஏன் வெளியிடக்கூடாது? என்று சட்டசபை செயலாளருக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
நேரடி ஒளிபரப்பு
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சி நிர்வாகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளுக்கு, தமிழக சட்டசபை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது சாத்தியமில்லை என்றும் சட்டசபையின் அவைக்குறிப்புகளை மட்டும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்’ என்றும் கூறியிருந்தார்.
வெளியிடவில்லை
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சட்டப்பேரவை செயலாளர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், அவைகுறிப்புகளை இணையதளத்தில் வெளியிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை அவைகுறிப்புகளை இணையதளத்தில் வெளியிடவில்லை. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது’ என்று கூறினார்.
என்ன நடவடிக்கை?
இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளின் எழுத்துப்பூர்வமான பதிவுகளை இணையதளத்தில் ஏன் பதிவேற்றம் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்கள்.
பின்னர், ‘இணையதளத்தில் அவைகுறிப்பில் வெளியிட என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த ஐகோர்ட்டுக்கு சட்டசபை செயலாளர் தெரியப்படுத்தவேண்டும்’ என்று கூறி விசாரணையை டிசம்பர் 21–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.