ராணுவத்தினருக்கு புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை !!

 புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட இருப்பதால் ராணுவ ஓய்வூதியதாரர்கள் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டை சமர்ப்பிக்காவிட்டால் 20 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும்.இதுகுறித்து ராணுவ ஓய்வூதியம் வழங்கும்

அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழாவது சம்பளக் குழு பரிந்துரையின்படி, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவை, ஓய்வூதியம் வருகிற புதன்கிழமை (நவ.30) வழங்கப்படவுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி இந்த அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் வருகிற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (பான் அட்டை) சமர்ப்பிக்க வேண்டும்.
 அப்படி சமர்ப்பிக்க தவறுவோரின் முழு வருடாந்திர ஓய்வூதியத்தைக் கணக்கிட்டு 20 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யப்படும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இது பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...