அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தாதது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
அரசு பள்ளிகளில் கழிப்பறை:
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.



இது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு உத்தரவிட்டு இருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:


நீதிமன்ற உத்தரவை மதிக்காத பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாத துறை இயக்குநர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது. அரசு பள்ளிகளில் எத்தனை நாட்களில் கழிப்பறை கட்டப்படும். இது குறித்து விரிவான அறிக்கையை நவ.,22ல் தாக்கல் செய்ய வேண்டும்.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வழக்கு விசாரணை நவ.,22க்கு ஒத்தி வைக்கப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...