100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை தோல்விக்குள்ளாக்கும் அரசு, மாநகராட்சி பள்ளிகள் !!

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்யும் வகையில், 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் கல்வியில் பின்தங்கும் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தால் வேண்டுமென்ற தோல்வியடையச் செய்யப்படுவதாக ஆய்வுத் தகவலில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.


இதுகுறித்து, பிரஜா என்ற அறக்கட்டளை "தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வியின் நிலை தொடர்பான முதல் ஆண்டு அறிக்கை' என்ற ஆய்வுத் தகவலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

தில்லியில் உள்ள 1,009 அரசுப் பள்ளிகள், 1,709 மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வருமாறு:
2013-14 காலகட்டத்தில் 17 சதவீத மாணவர்கள் 9-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறவில்லை. இவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 2014-15 காலகட்டத்தில் 45 சதவீதமாகவும், 2015-16 காலகட்டத்தில் 50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல, 2013-14 காலகட்டத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 23 சதவீதம் பேர் 12-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறவில்லை. அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 2014-15 காலகட்டத்தில் 35 சதவீதமாகவும், 2015-16 காலகட்டத்தில் 20 சதவீதமாகவும் உள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்துள்ளது. அதேவேளையில், பள்ளிகளில் இருந்து பாதியில் நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2013-14 காலகட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் 8,69,540 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதுவே 2015-16 காலகட்டத்தில் 5 சதவீதம் குறைந்து 8,18,707 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 2013-14 காலகட்டத்தில் 15,92,813 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இந்த எண்ணிக்கை 2015-16 காலகட்டத்தில் 6 சதவீதம் குறைந்து 14,92,132-ஆக உள்ளது.
1-ஆம் வகுப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 27 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2010-11 காலகட்டத்தில் 1,69,215-ஆக இருந்த அந்த வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, 2015-16 காலகட்டத்தில் 1,23,325-ஆக சரிவைச் சந்தித்துள்ளது.
அதேபோல், 10-ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2011 மார்ச் மாதம் 99.09-ஆக இருந்த 10-ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம், 2016 மார்ச் மாதம் 89.25 சதவீதமாக குறைந்துள்ளது.
எனினும், 12-ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் அந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2011 மார்ச் மாதம் 87.54-ஆக இருந்த தேர்ச்சி விகிதம், 2016 மார்ச் மாதம் 88.91-ஆக அதிகரித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியில், தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் 2 சதவீதம் அதிகமாக தேர்ச்சி விகிதம் வைத்துள்ளன.
அரசுப் பள்ளிகள் மீதான அதிருப்தி குறித்து 4,572 வீடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படித்தால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இதுதவிர, அங்குள்ள கல்வி மற்றும் ஆசிரியர்களின் தரமும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரஜா அறக்கட்டளையின் தலைவர் நிதாய் மேத்தா கூறியதாவது:
கல்வியில் பின்தங்கிய மாணவர்களை 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி அடையச் செய்தால், அத்தகைய மாணவர்களால் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் சரிவைச் சந்திக்கும் என்று பள்ளிகள் கருதுவதாலேயே இவ்வாறு நடக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தில் தீவிரமான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிப்பதிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் தில்லி அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று நிதாய் மேத்தா கூறினார்.

10-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறாதவர்கள்

2013-14    17%
2014-15    45%
 2015-16    50%

12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறாதவர்கள்
2013-14    23%
2014-15    35%
 2015-16    20%.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...