மத்திய அரசின் "ஷியாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்' என்ற திட்டத்தில், அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆறு ஊராட்சிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது போல், ஊரக பகுதிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஷியாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்' என்ற திட்டத்தின் மூலம், ஊராட்சிகள் தொகுப்பாக (கிளஸ்டர்) தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இந்திய அளவில், 100 மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழகத்தில், கோவை, திருப்பூர், சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா, ஆறு ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதி, தனி தொகுப்பாக வரையறுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சி, பள்ளிகல்வித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுசுகாதாரம், மருத்துவம், மின்சாரம் என, அனைத்து துறைகள் வாயிலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளில், முதல்கட்டமாக, ஆறு ஊராட்சிகள் தேர்வாகியுள்ளன. அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட, வேலாயுதம்பாளையம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு, செம்பியநல்லூர், கணியாம்பூண்டி, தெக்கலூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம் ஆகிய ஊராட்சிகள் தொகுப்பாக சேர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், மத்திய அரசு, 70 கோடி ரூபாய்; மாநில அரசு, 30 கோடி ரூபாய் என, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கலெக்டர் ஜெயந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம், நடந்தது.
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள், இதில் தேர்வாகியுள்ளன. புதிய மாவட்டம் என்பதாலும், அதிக மக்கள் வசிக்கும் மாவட்டம் என்பதாலும், திருப்பூர் மாவட்டமும் தேர்வாகியுள்ளது. வரலாற்று பாரம்பரியம் மிக்க, அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள் இத்திட்டத்தில் தேர்வாகியுள்ளதால், நகர்ப்பகுதிக்கு ஈடான வசதிகளை பெற முடியுமென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குருநாதன், வேளாண்துறை இணை இயக்குனர் ரங்கநாதன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.