புதுடெல்லிமாநில பாடத்திட்டத்தை போல சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியிலும் 10–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த நடைமுறை கடந்த 2010–ம் ஆண்டு கைவிடப்பட்டது. இந்த நிலையில் 10–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் இருப்பது கல்வித்தரத்தை பாதிக்கும் என்று கல்வியாளர்கள்
கருதுகிறார்கள்.மேலும் நேரடியாக பிளஸ்–2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மீண்டும் 10–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘இம்மாத இறுதியில் சி.பி.எஸ்.இ. வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 10–ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். எனவே அடுத்த கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.