பொது இடங்களில் திடக்கழிவு வீசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் !!

 'பொது இடங்களில் திடக்கழிவுகளை கொட்டுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

உத்தரவு :

டில்லியில், திடக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர், நீதிபதி சுதந்திரகுமார், நேற்று
பிறப்பித்த உத்தரவு: டில்லியில், தினசரி, 9,600 டன் திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றை அகற்றுவதற்கான தெளிவான திட்டம், உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, திடக்கழிவுகளை உடனுக்குடன் சேகரித்து, வாகனங்கள் மூலம் அப்புறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ரூ.10,000 அபராதம் :



திடக்கழிவுகளை உண்டாக்கும் உணவகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்டவை, கழிவுகளை பிரித்து, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.பொது இடங்களில் திடக்கழிவு கொட்டுவோருக்கு, ஒவ்வொரு விதிமீறலுக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...