10-ம் வகுப்புக்கு மத்திய கல்வி வாரிய தேர்வு கட்டாயம் அரசுக்கு பரிந்துரை


மத்திய கல்வி வாரிய திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இப்போது வாரிய தேர்வு அல்லது பள்ளிகள் நடத்தும் தேர்வில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மத்திய கல்வி வாரிய தேர்வு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய கல்வி வாரியம் பரிந்துரை அனுப்பியுள்ளது.


அதேபோல இந்தி, ஆங்கிலம், நவீன இந்திய மொழி என 3 மொழிகளில் கல்வி பயிலும் திட்டம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இதில் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...