மத்திய அரசால், ரூபாய் நோட்டு வாபஸ் நடைமுறை அமல்படுத்திய பிறகு இதுவரை, 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில்டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நவ.,8 ம் தேதி எடுக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த நாள் வரை, 12.44 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில், டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,கள் மூலம், 4.61 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 170 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும்; 2,010 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.