டிசம்பர் 13: அதிமுக-வுக்கு தலைமை ஏற்கிறார் சசிகலா ???

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, ஐந்து நாட்கள் ஆன நிலையிலும் அதிமுக-வினரின் கண்களில் கவிந்த சோகம் இன்னும் கலையவில்லை. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற துயரச் செய்தி, அதிமுக-வினரை மட்டுமின்றி, தமிழக மக்களையும் கலங்கடித்தது.



மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 6ஆம் தேதி காலை 6:00 மணிக்கே சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டுவருவதற்கு முன்பாகவே, ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கே குவிந்திருந்தனர். அன்று காலையில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கும் வரை பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி, சசிகலாவும் அவரது குடும்ப உறுப்பினர்களுமே சூழ்ந்திருந்தனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, யார் யாரையெல்லாம் வெறுத்தாரோ, யார் யாரையெல்லாம் நெருங்கவிடாமல் தடுத்தாரோ, யார் யாரையெல்லாம் கைது செய்து சிறையில் தள்ளினாரோ அவர்கள் எல்லோரும் மறைந்த ஜெயலலிதாவின் உடலருகே இருந்தனர். இது அப்போதே ஒரு விமர்சனத்தை எழுப்பியது.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் வரை சசிகலாவும் அவரது உறவினர்களுமே அனைத்தையும் செய்தனர். அதற்குப் பின்புதான் சசிகலா யார், அவங்க எப்படி எல்லாவற்றையும் செய்யலாம் என்ற கேள்வியோடு சசிகலாவுக்கு எதிரான வேலைகளை ஒரு குரூப் செய்யத் தொடங்கியது. சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பு பிரச்சாரத்தையும் அந்த குரூப் செய்யத் தொடங்கியது.

உடனே, சசிகலாவும் அவரது ஆலோசகர்களும் விழிப்படைந்து, சசிகலாவுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை கவனத்தில்கொண்டு, கட்சியை கைப்பற்றி சசிகலாவை தலைமையேற்கச் செய்வதற்கான முனைப்பில் வேகம்காட்டத் தொடங்கினர். சந்தனப்பேழையில் இட்டு ஜெயலலிதாவின் உடல், நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யத் தொடங்கியதிலிருந்தே அதிமுக-வின் முக்கிய அரசியல் தொடங்கியது.

அதற்கடுத்து, அடுத்தகட்டமாக உடனுக்குடன் வேகமாக நடந்த காய்நகர்த்தல்களைத் தொடர்ந்து சசிகலா, அதிமுக-வின் தலைமையேற்பதற்கான நல்லநாளை குறிக்கும் வேலை தீவிரமாகியது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் 13ஆம் தேதியும் 15ஆம் தேதியும் நல்ல நாட்கள் என கணிக்கப்பட்டது.

15ஆம் தேதி வியாழக்கிழமை திருவாதிரை. அன்று சசிகலாவுக்கு ராசிப் பொருத்தம் சரியில்லையாம். அதனால் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முழு பவுர்ணமி ரோகிணி நட்சத்திரம், செவ்வாய் ஆட்சிக்கு யோகமான நாள் என்பதால், அன்றே பொதுக்குழு கூட்டப்பட்டு, கிருஷ்ணனுக்கு தீபம் ஏற்றி, எந்தவிதப் போட்டியும் இல்லாமல், சசிகலா அதிமுக-வின் தலைமையேற்கிறார். அனைத்தும் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் முடிந்துவிடும்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...