சென்னை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாடு முழுவதும் நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 15 ஆயிரம் பேர் எழுதினார்கள்.மெயின் தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 24 வகையான அகில இந்திய
பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த வருடம் யு.பி.எஸ்.சி. அறிவித்த 1,079 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதியிருந்தனர்.இந்த நிலையில் முதல்நிலை தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் 16–ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு டிசம்பர் 3–ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.பலத்த சோதனை அதன்படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மெயின் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. சென்னையில் மட்டும் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் இந்த தேர்வு நடந்தது.தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று கட்டுரைத்தேர்வு நடந்தது. வினாக்கள் ஓரளவு எளிதாகவே இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர். பிற்பகலிலும் தேர்வு நடந்தது.பொது அறிவு தேர்வுகள் கட்டுரைத்தேர்வு முடிந்த நிலையில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) பொது அறிவு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 7–ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாயத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இறுதியாக விருப்ப பாட தேர்வு 9–ந் தேதி நடக்கிறது.