வரி செலுத்துவோர் 1% மட்டுமே! - நிதி ஆயோக் சி.இ.ஓ. !!

இந்திய மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் என்று, நிதி ஆயோக் சி.இ.ஓ. அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை படை (NDRF) சார்பில் நடத்தப்பட்ட பணமில்லா பரிவர்த்தனை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற நிதி ஆயோக் சி.இ.ஓ.
அமிதாப் காந்த் பேசுகையில், ‘இந்தியப் பொருளாதாரம் தற்போதுள்ள 2 லட்சம் கோடி டாலர் என்ற அளவிலிருந்து, 2030ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலரைத் தொடுமானால் மிகப்பெரிய வளர்ச்சியடையும். எனினும், இந்தியாவிலுள்ள 1.25 மில்லியன் மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகித்தினர் மட்டுமே வரி செலுத்துபவர்களாக உள்ளனர். எனவே, பொருளாதார வளர்ச்சியைப் பெற நீண்டநாட்களாகலாம்.

அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் சுமார் ஒரு பில்லியன் மொபைல் சந்தாதாரர்களும் அதேபோல, ஒரு பில்லியன் ஆதார் எண் வைத்திருப்போரும் உள்ளனர். மேலும் இந்தியாவை உலகின் முன்னணி பொருளாதாரத்தை உயர்த்தும்நோக்கில் சுமார் 26 கோடிப்பேருக்கு ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் சுமார் 20 கோடிப் பேருக்கு ரூபே (RuPay) கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, ரொக்கப் பரிவர்த்தனையை பணமில்லா மின்னணு பரிவர்த்தனையாக மாற்றுவதற்கு இதுவே உகந்த நேரம். எனவே, பொருளாதார வளர்சிக்கான பங்களிப்பில் மக்கள் இணைய வேண்டும்’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...