இன்றைய முக்கிய செய்திகள் _22/12/2016_ !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வியாழன் 🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 மகன் வீடு உள்பட 13 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை: தமிழக தலைமை செயலாளர் வீட்டில் சோதனை; கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள் சிக்கின தலைமை செயலகத்திலும் சோதனை நடந்ததால் பரபரப்பு

✳🔯 வார்தா புயலால் சேதம்: வண்டலூர் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட 28-ந் தேதி வரை தடை நீட்டிப்பு; அதிகாரி தகவல்


✳🔯 ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்; திருநாவுக்கரசர் பேட்டி

✳🔯வருமானவரித்துறையினர் சோதனை: ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

✳🔯 ரூ.131 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காண்டிராக்டர் சேகர்ரெட்டி கைது; சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை

✳🔯 தடய அறிவியல் துறையில் தகுதியான நபர்களை நியமிக்க விதிகளை உருவாக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳 பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு “குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது தொழில் நிறுவனங்களிடம் ரூ.65 கோடி பெற்றார்

🈹🈳 ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு

🈹🈳 ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனை ரத்து

🈹🈳 குளறுபடியான டிராபிக் சிக்னல் போல மோடி அரசு பெரும் குழப்பத்தில் உள்ளது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

🈹🈳 பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்: அரசியல் கட்சிகளுக்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

🈹🈳 ராமமோகன ராவ் சம்பந்தி வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

🈹🈳 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் மம்தா பானர்ஜி கண்டனம்

🈹🈳 தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் மோடிக்கு, மம்தா பானர்ஜி சவால்

🈹🈳 125 கோடி மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் ‘நிதி ஆயோக்’ அதிகாரி தகவல்

🈹🈳 ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

🈹🈳 தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் நிதி விவரங்களை ஆய்வு செய்ய திட்டம் வருமான வரித்துறைக்கு கடிதம் எழுத தேர்தல் ஆணையம் முடிவு

🈹🈳 இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘நிர்பயா’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌎🌍 பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து அகற்றுங்கள்: விடுதலைப்புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் ஒபாமாவுக்கு, தமிழ் அமைப்பு கோரிக்கை

🌎🌍மெக்சிகோவில் பயங்கரம் பட்டாசு சந்தையில் வெடி விபத்து; 31 பேர் கருகி சாவு

🌎🌍இந்தோனேசியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்த 3 பேர் சுட்டுக்கொலை ஒருவர் கைது

🌎🌍 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை விட ஹிலாரி 28½ லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றார் மக்கள் வாக்குகள் இறுதி நிலவரம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2661-7(-0.26%)  24 காரட் 10கி
 27820-70(-0.25%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 42100  -200(-0.47%) பார் வெள்ளி 1 கிலோ
 39300  -275(-0.69%)

💰💰 ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை; கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் சாதனை

💰💰 கிரா­மங்­களில் இல­வச மொபைல் போன் இணைய சேவை

💰💰 யூ.டி.ஐ., மியூச்­சுவல் பண்டு விரைவில் பங்கு வெளி­யீடு

💰💰தென்­னாப்­ரிக்­கா­வுக்கு ‘க்விட்’ கார்; ரெனோ நிறு­வனம் திட்டம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏 டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடம் அஸ்வின் 2–வது இடம் ஜடேஜா பேட்ஸ்மேன்களில் கருண் நாயர் முன்னேற்றம்

🏏🏏 கருப்பு நிற பேட் பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை

🎾🎾கத்திக்குத்தில் காயம் அடைந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவுக்கு ஆபரேஷன் 3 மாதம் விளையாட முடியாது

🎾🎾 பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பட்டத்தை வெல்ல விரும்புகிறேன்; சானியா மிர்சா பேட்டி

🎾🎾சென்னை ஓபன் டென்னிஸ்: மைனெனி–ராம்குமார் ஜோடிக்கு வைல்டு கார்டு
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்”

*-இயேசு கிறிஸ்து*
*⭕தகவல்துளி⭕*

ரஷ்யாவின் தேசிய விளையாட்டு *சதுரங்கம்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...