நோட்டு ஒழிப்புக்கு பின்னர் ஐதராபாத்தில் ரூ.2,700 கோடி தங்கம் வாங்கிய பண முதலை !!

ரூ.1,000, ரூ.500 நோட்டு ஒழிப்புக்கு பின்னர் ஐதராபாத்தில் ரூ.2,700 கோடி தங்கம் வாங்கி குவித்த கருப்பு பண முதலைகள் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் அம்பலம்.


ஐதராபாத்,ரூ.1,000, ரூ.500 நோட்டு ஒழிப்புக்கு பின்னர் ஐதராபாத் நகரில் மட்டும் கருப்பு பண முதலைகள் ரூ.2,700 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்ததை மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் அம்பலப்படுத்தி உள்ளது.கருப்பு பண முதலைகள் அதிர்ச்சி



பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி இரவு நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரை ஆற்றியபோது, ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அவற்றை திரும்பப்பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.இது கருப்பு பண முதலைகளின் தலையில் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியை அளித்தது.அந்த அறிவிப்பு வெளியான நாளின் இரவில் இருந்தே கருப்பு பண முதலைகள், செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை கொண்டு தங்க நகைகளையும், பிஸ்கெட்டுகளையும் வாங்கி குவிக்க தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.ஐதராபாத்தில் ‘கிடுகிடு’ விற்பனை

அது உண்மைதான் என்பது இப்போது ஐதராபாத் நகரில் நடந்த ‘கிடுகிடு’ தங்க விற்பனை மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.இந்த நகரில் மட்டும் நவம்பர் 8–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரையில் ரூ.2,700 கோடிக்கு கருப்பு பண முதலைகள் தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி குவித்துள்ளனர்.இந்த கால கட்டத்தில் ஐதராபாத் நகருக்குள் ரூ.8 ஆயிரம் கோடி ரொக்கப்பணமும் இறக்குமதியாகி உள்ளதாக தொலைக்காட்சி சேனல் ஒன்று அம்பலப்படுத்தி உள்ளது.8 ஆயிரம் கிலோ தங்கம்

ஐதராபாத்தில் தங்க விற்பனை அதிகரித்து இருப்பதுபற்றி மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது:–ஐதராபாத் நகரில் நவம்பர் 8–ந் தேதி முதல் 30–ந் தேதி வரையில் 8 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அவ்வளவும் விற்று தீர்ந்தும் உள்ளது.இந்த தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி குவித்தவர்கள், அதற்கு பின்னர் மாயமாகி விட்டனர். டிசம்பர் 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரையில் அங்கு புதிதாக மேலும் 1,500 கிலோ தங்கம் இறக்குமதியாகி இருக்கிறது. தங்க சந்தையில் விற்பனை கிடுகிடுவென ஏறி உள்ளது.ரூ.100 கோடி

ஒரு குறிப்பிட்ட நகைக்கடையில் கருப்பு பண முதலைகள் முன்கூட்டியே பணத்தை செலுத்தி தங்க பிஸ்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்று உள்ளனர். இந்த ஒரு நிறுவனத்தில் மட்டுமே 8–ந் தேதி நள்ளிரவு வரையில் 5 ஆயிரத்து 200 பேருக்கு ரூ.100 கோடிக்கு தங்க விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த பணத்தை அந்த நகைக்கடை நிர்வாகம், வங்கியில் செலுத்தி, அதை 4 தங்க வியாபாரிகளுக்கு மாற்றி உள்ளனர்.ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் அழிப்பு

அங்கு கருப்பு பண முதலைகள் வந்து தங்கம் வாங்கிய காட்சிகள் அடங்கிய ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழிக்க முயற்சி நடந்தது பற்றி எங்கள் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. அந்த கடையின் அருகில் உள்ள கடைகளில் இருக்கும் ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய முடிந்தது. ஆனால் அந்த குறிப்பிட்ட நகைக்கடையில் அத்தகைய பதிவு இல்லை.ஐதராபாத் நகருக்குள் எம்.எம்.டி.சி., எம்.டி. ஓவர்சீஸ் லிமிடெட், ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் டயமண்ட் இந்தியா நிறுவனங்களும், ஆக்சிஸ், இண்டஸ் இண்ட், யெஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., கோடக் மகேந்திரா, தி பாங்க் ஆப் நோவா ஸ்காட்டியா உள்ளிட்ட வங்கிகளும் தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டு வந்துள்ளன.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...