புதுடெல்லிரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகியை பார்த்து, ‘சாமானியர்களுக்கு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
கிடைக்கும்நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் எப்படி லட்சக்கணக்கில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கிடைக்கின்றன?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.அதற்கு அட்டார்னி ஜெனரல், ‘அதற்கு சில வங்கி மேலாளர்களின் சட்டவிரோத செயல்பாடுகளே காரணம். அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று கூறினார்.மேலும், ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளதாகவும், மக்களின் சிரமத்தை குறைக்க 24 மணி நேரமும் மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.