ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு தீவிரம் ரொக்க பண புழக்க நிலையில் 3 வாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் சக்திகாந்த தாஸ் பேட்டி!!!

புதுடெல்லிரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு தீவிரமாக நடைபெறுவதால், ரொக்க பண புழக்க நிலையில் 3 வாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறினார்.ரூ.500 நோட்டு அச்சடிப்பில் கவனம்



ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் ஒழிப்பால் ரொக்க பண புழக்கம் குறைந்து விட்டது. வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்கு மக்கள் இன்னும் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் டெல்லியில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–சந்தையில் இருந்து திரும்பப்பெறப்பட்ட பணத்தை ஈடுகட்டுவதற்காக முதலில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதில் கவனம் செலுத்தினோம். இப்போது கூடுதலாக ரூ.500 நோட்டுகளை அச்சிடுவதில் கவனம் செலுத்துகிறோம். இதன்மூலம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கூடுதலாக புழக்கத்துக்கு வரும். எளிதாக அவற்றை மாற்றிக்கொள்ளவும் முடியும்.பண புழக்க நிலையில் முன்னேற்றம்

மத்திய அரசு, பாரத ரிசர்வ் வங்கி, அமலாக்க முகமைகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிற நிலையில், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் ரொக்க பண புழக்க நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.பண அறைகள் மூலமாகவும், வங்கி கிளைகள் மூலமாகவும் இதுவரை ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகள் கூடுதலாக சப்ளை செய்யப்பட்டுள்ளன. இது இந்த மாத இறுதியில் நிலைமையில் முன்னேற்றத்தை கொண்டு வரும்.டெபாசிட் எவ்வளவு?

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வங்கிகளில் செலுத்தப்பட்ட பணத்தை சரிபார்த்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் உறுதி செய்யாத நிலையில், சரியாக எவ்வளவு பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை கூறுவது சரியாக இருக்காது.நவம்பர் 8–ந் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.விமானம் மூலம் பணம்

கிராமப்புறங்களில் ரூபாய் நோட்டுகள் எளிதாக கிடைக்க செய்கிற விதத்தில், சமமான முறையில் ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் அரசும், வங்கிகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன.சில பகுதிகளில் பண நெருக்கடி நிலவுவதாக சொல்கிறீர்கள். எங்கெங்கு பணம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் விமானம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது.அதிரடி சோதனைகள்

இப்போது அதிரடி சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகள், மீண்டும் புழக்கத்தில் விடப்படும். இதுவும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை நிலையில் முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்.பணப்புழக்க அழுத்தத்தை குறைக்கிற விதத்தில், ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிற அச்சகங்கள் 500 ரூபாய் நோட்டுகளை தீவிரமாக அச்சிட்டு வருகின்றன. கூடுதலாக ரூ.500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகிறபோது, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் கூடுதலாக வெளியே வரும்.வங்கிகள் ஏ.டி.எம். எந்திரங்கள் வழியாக பணம் வினியோகிப்பதை விட தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிளைகள் மூலம் பணம் வினியோகம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதன் காரணமாகவும் ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்க வேண்டியதாகிறது.கள்ள நோட்டு சாத்தியம் குறைவு

அதிரடி சோதனைகளைப் பொறுத்தமட்டில் பொத்தாம்பொதுவாக மேற்கொள்வதில்லை. நிதி புலனாய்வு பிரிவுகளுக்கு வருகிற குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில்தான் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெருமளவு பணம் கைப்பற்றப்படுகிறது. மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும், அரசு முகமைகளும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளன.புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் உள்நாட்டில்தான் முற்றிலும் தயாராகின்றன. எனவே ரூ.2,000, ரூ.500 கள்ளநோட்டுகள் அச்சடிப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இது ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பானதாக ஆக்குவதுடன், கள்ள நோட்டுகள் அச்சிடுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...