500 கிலோ எடைகொண்ட எகிப்து பெண் அறுவை சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்!!!

கெய்ரோ,உலகின் அதிக எடைகொண்ட எகிப்திய நாட்டு பெண் விரைவில் எடைகுறைப்பு அறுவை சிகிச்சைக்காக இந்தியா வரஉள்ளார். எகிப்து நாட்டின் கெய்ரோ நகரை சேர்ந்த பெண் எமான் (வயது 36). இவருக்கு 11 வயது இருந்தபோது பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார்.
படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை நாளுக்கு நாள் பெருகி, தற்போது 500 கிலோ எடையுடன் காட்சி அளிக்கிறார். உலகிலேயே குண்டான பெண்ணாகவும் கருதப்படுகிறார். அதிகரித்துக்கொண்டே செல்லும் உடல் பருமனால் அவர் மிகவும் அவதி அடைந்து வருகிறார். இதையடுத்து, உலகின் அனைத்து நாடுகளாலும் கைவிடப்பட்ட நிலையில், எமானுக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் என்பவர் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள முன்வந்துள்ளார்.இதுகுறித்து வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எமானின் நிலை குறித்து டாக்டர் எடுத்துக்கூறி, அவருக்கு விசா கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எமானை இந்தியா அழைத்து வருவதற்கு எகிப்தில் இருந்து நேரடி விமானங்கள் கிடையாது. அரை டன் எடை கொண்ட அவரை ஏற்றி வர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. ஏனெனில் அவரை விமானத்தில் ஏற்ற அதன் வாசல் பகுதியை பெரிதாக்க வேண்டி இருக்கும். விமானத்திற்கு உள்ளேயும் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்கும். இதனால் அவரை மும்பை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.இதுகுறித்து டாக்டர் முப்பஷால் கூறுகையில், “பல ஏர் ஆம்புலன்ஸ் நிர்வாகங்களை அணுகினோம். இருப்பினும், சாதகமான பதில் கிடைக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் இங்கு 3 மாதங்கள் தங்க வேண்டியிருக்கும். அறுவை சிகிச்சை செய்ய வசதியாக 450 கிலோ எடைகொண்ட பிரத்யேக படுக்கை அமைத்து உள்ளோம். அவரை இந்தியா அழைத்து வருவது மிகப்பெரிய சவால்” என்றார்.  500 கிலோ எடைகொண்ட எமான் அகமத் அப்த் எல் (வயது 36) அடுத்த 10 நாட்களுக்குள் இந்தியாவிற்கு வர தயார் ஆகிறார் என்று அவருடைய சகோதரி ஷயாமா கூறிஉள்ளார்.  எமான் கதை டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 25 ஆண்டுகளாக எமான் தன்னுடைய படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது அவரது குடும்பத்தினர் தரப்பில். எமானை அவருடைய தயாரும், சகோதரி ஷயாமாவும் பராமரித்து வருகின்றனர். ஷியாமா மேலும் பேசுகையில், “டாக்டர் முப்பஷாலுக்கு நான் பெரிதும் கடமை பட்டு உள்ளேன், அவர் எமான் இந்தியா வருவதற்கு தனியார் ஏர் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து உள்ளார்,” என்றார். சிகிச்சை முடிந்து ஒருவருடம் ஆன பின்னரே எமான் எகிப்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியாமா கூறுகையில் “நாங்கள் எப்போது திரும்புவோம் என்று எனக்கு தெரியாது. ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக ஆகலாம்,” என்றார். ஷியாமாவாவும் இந்தியாவிற்கு வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...