வர்தா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு !!

வர்தா நிவாரணம், உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். மின்வாரியத்துக்கு ரூ.350 கோடி, சென்னை மாநகராட்சிக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.10 கோடி, நெடுசாலைத்துறைக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


சேதமான அரசு கட்டடங்களை சீர்செய்ய பொதுப்பணித்துறைக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டது. சுகாதாரத்துறைக்கு ரூ. 3 கோடியும், பால் பண்ணைகளில் சேதங்களை சீர்செய்ய ரூ. 50 லட்சமும் ஒதுக்கப்பட்டது. போக்குவரத்துக்கு சிக்னல்களை சீரமைக்க ரூ.5 கோடியும் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் இதர பூங்காக்களை சீரமைக்க ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டது. பேருந்துகள், பேருந்து பணிமனை கட்டிடங்களை சீரமைக்க ரூ. 2 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...