வங்கக்கடலில் உருவான 500 புயல்கள்; ஒடிசாவுக்கு பாதிப்பு!!!

‛கடந்த, 100 ஆண்டுகளில் (1891 முதல்) வங்கக்கடலில், 500 புயல்கள் உருவாகியுள்ளன. இதில், 107 புயல்கள் ஒடிசா மாநிலத்தை தாக்கியுள்ளன,'' என, ஒடிசா

மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி., பேராசிரியர் மொகந்தி கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறியதாவது:

மேற்கு பசபிக் கடலில் உருவாக்கும் புயல்களை விட வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் வலு குறைந்தவை. ஆனால், அதிக சேதத்தையும் உயிரழப்பையும் ஏற்படுத்துபவை. வங்கக்கடலில் உருவான, 24 புயல்களில், 18 புயல்களினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடற்கரை அருகேயுள்ள பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பதாலும், புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலும் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...