உயிர் காக்கும் 55 மருந்துகளின் விலை குறைப்பு !!

எய்ட்ஸ், சர்க்கரை நோய் உள்ளிட்ட 55 நோய்களுக்கான மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. மருந்துகளின் விலை கட்டுப்பாட்டு ஆணைய திருத்த ஆணைப்படி, மிக அத்தியாவசிய 55 மருந்துகளுக்கு மத்திய அரசின் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. 55 மருந்துகளின் விலை 5 சதவீதத்தில் இருந்து 44 சதவீதம் வரை

குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸ், சர்க்கரை நோய், உடல் நடுக்கம், பாக்டீரியா தொற்று, தொண்டை அழற்சி மருந்துகளின் விலை குறையும். மேலும் 29 மருந்துகளின் சில்லரை விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விலைகட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படாத மருந்துகளின் விலையை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கு மிகாமல் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...