வாழ பிடிக்கவில்லை; தற்கொலை செய்கிறேன்: 6-ஆம் வகுப்பு மாணவி !!

தருமபுரி மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ஒருவர் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம் பட்டியை சேர்ந்த
சண்முகம் என்பரது மகள் தர்ஷினி அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் மாணவி தர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மாணவி தர்ஷினி தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. அன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி சோகமாகவே இருந்துள்ளார்.
தான் இனிமேல் பள்ளிக்கு வர மாட்டேன் என சக மாணவிகளிடம் கூறிய அவர் தன்னிடம் இருந்த பேனா, பென்சில் போன்ற பொருட்களை தோழிகளுக்கு கொடுத்துள்ளார். எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு என்னை இனிமேல் பார்க்க முடியாது என் நினைவாக இதை வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த மாணவி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...