முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன் ராவ் இல்லத்தில் இருந்து முக்கிய டைரி சிக்கியதாகவும் அதில் இடம்பெற்ற ரகசிய குறிப்புகளின் அடிப்படையில் பல அரசு அதிகாரிகள் இல்லங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ள ஹைராதாபாத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 60 பேர் சென்னை வந்துள்ளதாக வருமான வரித்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராம மோகன ராவ் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றுடன் லேப்–டாப்கள், சி.டி.க்கள், கணினி, ஹாட் டிஸ்க், பென்–டிரைவ்கள் மற்றும் மிகவும் முக்கியமான டைரி ஒன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளது. இதனை கொண்டு வருமானவரித்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வருமானவரித்துறைக்கு தெரியவந்துள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த அதிரடி சோதனையை மேற்கொள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஐதராபாத்தில் இருந்து சுமார் 60 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் சென்னைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த குழுவினருடனும் ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டு வரும் குழுவினருடனும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறை ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சோதனை தொடர்பான பணி விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்த தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராம மோகன ராவ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், சில அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் சிலருடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக வருமானவரித்துறைக்கு தெரியவந்துள்ளது. இவர்களுடன் தொழில் ரீதியாகவும், ஒப்பந்தங்கள் வழங்கியது தொடர்பாகவும், கோப்புகளில் கையொப்பம் போட்டது தொடர்பாகவும் பண பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக பல ரகசிய குறிப்புகளும் அதில் குறிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை, தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்க தமிழக முன்னாள் முதல்–அமைச்சருக்கு பரிந்துரை செய்தவர், தமிழக முன்னாள் கவர்னர் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களிலும் தொடர் சோதனை நடத்தவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டு இருப்பதாக தெரியவருகிறது. இந்த சோதனையிலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஓரிரு நாட்களில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையை தீவிரப்படுத்தவும் வருமானவரித்துறை திட்டமிட்டு உள்ளது என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.