உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஆங்கில புத்தாண்டு போனசாக அரசு
ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், “ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். எனினும் இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.