தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் பணத்தட்டுப்பாடு காரணமாக தொழில், வர்த்தகம் 80 சதவிகிதம் முடங்கி உள்ளது. இதற்கு தீர்வு காண பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக தொழில் அமைப்பினர் கூறினர்.
கோவையை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர, தொழில் நிறுவனங்களை சேர்ந்த 51 தொழில் அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் கோவை கொடிசியாவில் நேற்று மாலை நடந்தது. இதைத்தொடர்ந்து இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு தலைவர் வனிதா மோகன், கொடிசியா சங்க தலைவர் சுந்தரம், சீமா சங்க தலைவர் கே.கே.ராஜன், கோயிண்டியா தலைவர் மகேந்திரா ராமதாஸ், காட்மா சங்க தலைவர் ரவிக்குமார், டேக்ட் சங்க தலைவர் ஜேம்ஸ் உள்பட தொழில், வர்த்தக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
“கடந்த காலத்தில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டபோது கோவையில் இணைந்த 51 தொழில் அமைப்பினரும், தற்போது ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வந்து உள்ளோம். ரூபாய் 500, 1000 நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக அறிவித்து, கருப்புப் பணத்தை ஒழிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை வரவேற்கக்கூடியது. அதே வேளையில் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு, தொழில் துறையினர் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் 80 சதவிகிதம் வரை தொழில், வர்த்தகம் முடங்கி உள்ளது. ஏ.டி.எம்களில் ரூபாய் 500 நோட்டுகள் கிடைப்பதில்லை. புதிய ரூபாய் 2000 நோட்டு கிடைத்தாலும், அதை மாற்ற முடியவில்லை. இதனால் கோவையில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.
இது போன்ற நெருக்கடியால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வராமல் உள்ளனர். வங்கிக்கணக்கு தொடங்கி, வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. தொழிலாளர்கள் இல்லாததால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வாரத்தில் நான்கு நாட்கள்தான் வேலை நடக்கும் நிலை உள்ளது. 20 பேர் வேலை செய்த தொழிற்சாலைகளில் 10 பேர் வரை தான் வேலை செய்கிறார்கள்.
கோவையை பொருத்தவரை, பணத்தட்டுப்பாட்டு பிரச்னையால் கடந்த மாதம் வரை தொழில், வர்த்தகம் தாக்குப்பிடித்தது. இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உற்பத்தி முடக்கத்தால் வர்த்தக ஒப்பந்தங்களும் பறிபோகும் நிலை உள்ளது.
நடப்புக்கணக்கில் வங்கியில் இருந்து வாரத்துக்கு ரூ.50,000 வரை எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. அந்த தொகையும் பல வங்கிகளில் முழுமையாக கிடைப்பதில்லை. கிடைக்கின்ற அந்த தொகையை வைத்துக்கொண்டு சம்பளம் கொடுக்க முடிவதில்லை. எனவே ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து தேவைக்கு எவ்வளவு பணத்தை எடுத்தார்களோ? அந்த தொகையை அனுமதிக்க வேண்டும்.
தொழில்துறையினர் வாங்கிய வங்கிக்கடன்களுக்கு ஒரு ஆண்டு வரை கால அவகாசம் வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் வந்து வேலை செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக வடமாநில தொழிலாளர்களாக உள்ளதால், வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் அடையாள அட்டை, பான் கார்டுகளை கேட்கக்கூடாது. அது இல்லாமல் நிறுவன ஒப்புதல் அடிப்படையில் வங்கிக்கணக்குகளை தொடங்க உதவ வேண்டும்.
ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும்போது அதற்கான சேவை வரியை தற்போது நிறுத்தி வைத்திருந்தாலும், அந்த வரிப்பிடித்தம் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது வங்கிகளுடைய மறைமுக வருமானமாக உள்ளது. கோவையைப் பொருத்தவரை சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தான் அதிகளவில் உள்ளது. இது தவிர வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இதில் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது இந்த பிரச்னையால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு கோவை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு போதுமான அளவில் தட்டுப்பாடு இல்லாமல் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி, நிதி மந்திரியை சந்தித்து முறையிடுவோம். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்து உள்ளோம். பிரதமரைச் சந்தித்து வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிவிப்போம்” என்று அவர்கள் கூறினர்.