சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானவரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி.
சென்னை, சென்னையை சேர்ந்தவர் ரிஷ்வான் செரிப். இவர், கடந்த மார்ச் 16–ந் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவரை சைதாப்பேட்டை 11–வது கோர்ட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை சிறையில் அடைக்க உத்தரவிட்டு வந்தது. இதை எதிர்த்து ரிஸ்வான் செரிப்பின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.அதில், ‘ஒரு குற்ற வழக்கில் கைதானவரை 90
நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கும் உத்தரவை பிறப்பிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், என் கணவரை 90 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்க சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டு வருகிறது. எனவே, இதை சட்டவிரோதம் என்று அறிவித்து, என் கணவரை சிறையில் இருந்து விடுவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 43–டி மற்றும் 2008–ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை சட்டம், பிரிவுகள் 16, 22 ஆகியவைகளின்படி, குற்றம் சுமத்தப்பட்டவரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கும் உத்தரவை பிறப்பிக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உண்டு’ என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.