மகள் திருமணம்: ஏழைகளுக்கு 90 வீடுகள் அன்பளிப்பு!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனமாக கட்டில், பீரோ, தங்க நகைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை அளிப்பர். வசதியான பெற்றோர் கார், வீடு போன்றவற்றை திருமணப் பரிசாக அளிப்பார்கள். இந்நிலையில், தங்கள் மகளின் திருமணப் பரிசாக, வீடில்லாமல் தவிக்கும் ஏழை மக்கள் 90 பேருக்கு வீடுகளைப் பரிசளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அஜய் முனாட். இவர் வித்தியாசமான முறையில் தங்கள் மகளுக்கு திருமணப் பரிசை அளித்துள்ளார். இவர் மகளின் திருமணத்துக்கு ரூபாய் 70 லட்சம் முதல் 80 லட்சம் வரை செலவழிப்பதாக இருந்தார். இந்நிலையில், அவர் வீட்டருகே வீடில்லாமல் நடைபாதையில் உறங்கிய மக்களை கண்டு அவர் மனம் மாறியது. திருமணத்தின்போது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அதற்குப் பதிலாக வீடில்லாத மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தரலாம் என்று குடும்பத்தினருடன் ஆலோசனை செய்தார். அவரின் கோரிக்கையை குடும்பத்தினரும் உறவினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, மகளின் திருமணத்தன்று வீடில்லாத ஏழைகள் சிலருக்கு 90 வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார். மேலும், “என்னை போல் உள்ளவர்கள் ஆடம்பரச் செலவுகளை செய்யாமல், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். அதற்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், என் மகளின் திருமணச் செலவுகளை குறைத்து வீடு கட்டிக் கொடுத்துள்ளேன்” என்று அஜய் முனாட் தெரிவித்துள்ளார். மேலும், “சமூகத்தில் நம் அனைவருக்கும் சில பொறுப்புகள் உள்ளது. அவற்றை நிறைவேற்றுவது நம் கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது மகள், “என் தந்தையின் செயல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சமூகம் சார்ந்த அவருடைய நல்லெண்ணம் மன ஆறுதலை அளிக்கிறது. இது என்னுடைய மிகச்சிறந்த கல்யாணப் பரிசு” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் இதுபோன்ற செயல்களை செய்து வந்தால் ஏழை மக்கள் வளம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...