முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்கு புறப்பட்டது. மருத்துவர் கில்லானி தலைமையில் 4 பேர் கொண்ட குழு நரங், தல்வார், பிரிகன், ட்ரிஹா ஆகியோர் சென்னை விரைந்துள்ளனர் என மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு சென்னை விரைந்துள்ளது.