அஇஅதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் நடைபெற்ற நல்ல விஷயங்களில் ஒன்று ஆசிரியர் தகுதித்தேர்வு. ஜெயலலிதா ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு பள்ளி ஆசிரியர் கனவில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மூன்று முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பெற்று எழுபதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
ஆசிரியர் பட்டயப்படிப்பையும், பி.எட் படிப்பையும் முடித்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு இந்த தேர்வு ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறாமல் இருந்தது.

கடந்த மாதம் அனைத்து வழக்குகளிலும் தமிழக அரசுக்கு சாதகமான முறையில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்தவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்கத் தயாராக இருந்தது பள்ளி கல்வி துறை.
எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைய இப்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு நடக்குமா, நடக்காதா என்று சோகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்ணை நிர்ணயித்தது அரசு. இந்த மதிப்பெண்ணை எட்டிப்பிடித்தவர்கள் 1% க்கும் மிக குறைவு. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா சட்டசபையில் தேர்ச்சி மதிப்பெண் 82 எடுத்து இருந்தால் தேர்ச்சி என்று அறிவித்தார். இதன் மூலம் 70,000 பேர் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலையில் சேர தயாராக இருந்தார்கள். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை வெயிட்டேஜ் முறையினை அறிவித்தது. இந்த அறிவிப்பு 35,000 பேர் வேலைக்கு சேர முடியாத நிலையினை ஏற்படுத்தி விட்டது. இவர்கள் நீதிமன்ற கதவை தட்டி பார்த்தார்கள். நீதிமன்றம் தமிழக அரசு எடுத்த முடிவு சரி.
இனி அரசு உங்களுக்கு வேலை வழங்குவது குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மாதம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் முறையிட, அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன், இது குறித்து அவரிடம் தெரிவித்து நல்ல முடிவினை பெற்று தருவதாக சொல்லி இருக்கிறார்கள். அம்மா குணமடைந்து வந்தவுடன் ஆசிரியர் பணி கிடைத்து வாழ்வு மலரும் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவால் இப்போது சோகம் சூழ்ந்து மகிழ்ச்சி இழந்து இருக்கிறார்கள்.